• Feb 21 2025

அஜித் , சூர்யாவின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸா...வெளியான தகவல் இதோ!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இரண்டு திரைப்படங்கள், அஜித்தின் ‘Good Bad Ugly’ மற்றும் சூர்யாவின் ‘ரெட்ரோ’, ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீஸாகும் நிலை உருவாகியுள்ளது. முதலில், ஏப்ரல் 10 அன்று ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகும் என்று தகவல் வந்திருந்தது. அதே நாளில் அஜித் நடிக்கும் ‘Good Bad Ugly’ படமும் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அஜித்தின் படம் மே 1க்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் படங்கள் என்றாலே மாபெரும் எதிர்பார்ப்பு இருப்பதுடன் அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டம் செய்ய தயாராகவும் இருப்பார்கள். இதனால், பட தயாரிப்பாளர்கள் படத்தின் ரிலீஸ் திகதியை மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


தற்போது வெளிவந்த தகவலின்படி, ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், மே 1ம் திகதி படத்தை வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஏப்ரல் 10ல் வெளியாக இருந்த இந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மே 1ம் திகதி சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் வெளியாகவிருக்கிறது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ரிலீஸ் திகதி என்பதால், ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இதனால், ‘Good Bad Ugly’ இன்னும் வெளியீட்டு தேதியை உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் முன்னதாக, சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ம்  திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது ஒரு பழைய காலத்தின் பின்னணியில் நடக்கும் கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


சூர்யா ரசிகர்கள் இந்தப் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனெனில், ‘ரெட்ரோ’ படம் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் கதை மற்றும் நடிப்பு எப்படி இருக்கும் என்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் , தற்போது இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக வெளியான இந்த தகவல்  ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement