தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித் குமார், வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் ரேசிங் உலகிலும் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தவர். உலகளவில் பிரபலமான Porsche Sprint Challenge போட்டிக்கு அவர் தயாராகி வருகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டி உலகளவில் பிரபலமான மோட்டார் ரேசிங் சீரிஸ் ஆகும். இதில் திறமை வாய்ந்த ரேசர்கள் பங்கேற்று, தங்களது டிராக் ரேசிங் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இந்த போட்டியில் பிரமாண்டமான கார்கள் காணப்படும் என்பதால், பங்கேற்கும் ஒவ்வொருவரும் முன்னேற்பாடுகளுடன், கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் அவரை பெரிய திரையில் மட்டுமே பார்க்கப் பழகியிருந்தாலும், அஜித்துக்கு ரேசிங் மீது உள்ள காதல், அவரை பந்தய உலகில் பிரபலமாக்கியுள்ளது. கடந்த காலங்களில் Formula 2 மற்றும் பல சர்வதேச பந்தயங்களில் அவர் பங்கேற்றுள்ளார். தனது நேர்த்தியான டிரைவிங் ஸ்டைல், மற்றும் பெரிய ரேசிங் போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் ஆகியவை அவரை திறமை சாலியாக மாற்றியுள்ளன.
அத்துடன் தற்பொழுது பங்கேற்கும் போட்டியிலும் அஜித் குமார் தனது தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடனும் பங்கேற்கிறார். அஜித்தின் அனைத்து பந்தய அனுபவங்களும், இந்த போட்டியில் அவருக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
Listen News!