• Apr 15 2026

Saree லுக்கில் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட ஜனனி..! வெளியான கியூட் போட்டோஷூட் இதோ.!

shali / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகையாக ஜனனி விளங்குகின்றார். இதனைத் தொடர்ந்து சினிமாவிலும் சில கதாப்பாத்திரங்களில் நடித்து தன்னை நிரூபித்துக் கொண்ட ஜனனியின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.


இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஜனனி ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தில் அவருடைய பங்கேற்பு மிகக் குறைவாக இருந்தாலும், படம் வெளியான பிறகு ரசிகர்கள் “அது ஜனனி தானா?” என்று தேடிப் பார்க்கும் அளவிற்கு அவரது தோற்றம் கவனிக்கத்தக்கதாக இருந்தது.


இப்போதைய புகைப்படங்கள் ஜனனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து பல்வேறு ரசிகர்கள் “எங்க பிக்பாஸ் குயின் மீண்டும் ராணியாக வந்துட்டாங்க!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement