• Jan 19 2025

நடிகர் சந்தானம் நடிப்பில் ரிலீஸ் ஆன வடக்குப்பட்டி ராமசாமி... 2 நாள் வசூல் விபரம் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி தற்போது ஹீரோவாகவும் கலக்கி வரும் நடிகர் சந்தானம் A1, தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2, DD Returns என தனது ஹீரோ பாதையில் வெற்றியை சேர்த்துக்கொண்டே இருக்கிறார்.இந்நிலையில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வசூல் விபரம் தொடர்பாக பார்ப்போம் வாங்க. 


இவர் நடிப்பில் கடந்த 2ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி இப்படத்தை இயக்கியிருந்தார். டிக்கிலோனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் - கார்த்திக் யோகி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.


ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்று வரும் வடக்குப்பட்டி ராமசாமி முதல் நாள் உலகளவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 3 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement