• Jan 16 2026

"வணங்கான்" பாலாவின் ஒன் மேன் ஷோ! தெறிக்கவிடும் அருண் விஜய்! டுவிட் விமர்சனம் இதோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இயக்குநர் பாலா எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வெளியாகிய வணங்கான் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.


இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படம் இன்று திரையரங்குகளை அலங்கரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இந்த திரைப்படம் பாலாவின் 50ஆண்டு கால சினிமாவின் பிரதிபலிப்பாக உருவானது. 


இந்நிலையில் வெளியான இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் இவ்வாறு விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். " வணங்கான் ஒரு உணர்வுபூர்வமான பயணம்.அருண் விஜயின் நடிப்பு அபாரம், பாலாவின் இயக்கத்தில் நம்பமுடியாத படம். இசை, படப்பிடிப்பு எல்லாமே அருமை. முதல் பாதி அருமையாக இருக்கிறது. மிஷ்கின் பொருத்தமாக நடித்துள்ளார். பாலா ஒன் மேன் ஷோ என்று பலவாறு தங்களது கருத்துக்களை டுவிட் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement