• Apr 16 2025

விஜய் கட்சியில் முக்கிய பதவியில் ஆதவ் அர்ஜுனா ..! முழு விவரங்கள் இதோ..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

அனைவராலும் மிகவும் வரவேற்பினை பெற்று வரும் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் தற்போது விஜயின் நண்பன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த செய்தியினை இன்னும் ஒரு சில நாட்களில் விஜய் அதிகாரபூர்வமாக தெரியப்படுத்துவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாகிய ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் கட்சியிலிருந்து விலகினார். விலகிய பின்னர் விஜயுடன் மிகவும் நெருக்கமான நட்பினை வளர்த்து கொண்ட இவர் தற்போது விஜய் கட்சியில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.


மற்றும் இவருக்கு கட்சியில் முக்கிய பதவியினை வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஒரு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் உட்கட்டமைப்பினை அமைக்கும் பணியினை இவருக்கு அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வைரலாகியுள்ளது.


மற்றும் சுமூகமான முறையில் பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ளதுடன் உத்தியோகபூர்வ செய்திகள் இது குறித்து இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement