• Jun 24 2025

சிம்புக்காக சந்தானம்…சிவகார்த்திகேயனுக்காக சூரியா..?– வைரலான கருத்துக்கள் இதோ..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெவ்வேறு பரிமாணங்களில் திகழும் காமெடி நடிகர்கள், இப்போது மீண்டும் தங்கள் பழைய கூட்டணிகளை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கடந்த 10 வருடங்களில் தனித்துவமான வளர்ச்சி கண்ட சூரி, தற்போது ‘மாமன்’ திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கதைத்த கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.


‘மாமன்’ திரைப்படம், ஒரு உணர்வுபூர்வமான கதையாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.

இந்த வெற்றியை முன்னிட்டு, சூரி திருச்சியில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பின் போது, ஒரு செய்தியாளர் சூரியிடம், “சிம்புவுக்காக சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்கிறார். அதேபோல், சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் காமெடி நடிகராக நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?” எனக் கேட்டிருந்தார்.


இதற்கு சூரி, “நானே சரி சொன்னாலும் தம்பி கூப்பிடமாட்டார்..!” என்று நகைச்சுவையாகப் பதிலளித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், “ நாம இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், இருவருக்கும் சமநிலையிலான கதாப்பாத்திரம் இருக்க வேண்டும். அதுதான் சரியானது என்று சிவகார்த்திகேயனே சொன்னார். அதனால் சரியான கதை அமைந்தால், நிச்சயமாக ஒரு நாள் நடிப்போம்.” எனவும் தெரிவித்திருந்தார்.


Advertisement

Advertisement