• May 18 2026

சிவப்பு நிற ஆடையில் கண்களை கூசவைத்த ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ் கிளிக்ஸ் இதோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங், தமிழில் வெளியான தடையற தாக்க என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 

அதன் பின்பு தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அயலான் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரகுல் பிரீத் சிங்குக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.


இந்நிலையில் தற்போது சிவப்பு நிற புதிய உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சிவப்பு நிற ஆடையில் மெழுகு சிலை போல் காட்சியளிக்கும் அவரது அழகை பார்த்து ரசிகர்கள் பலரும் புகழ்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் அவர் அணிந்துள்ள ஆபரணங்களும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலும் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Advertisement

Advertisement