• Mar 28 2026

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் ஐந்து படங்களின் விபரங்கள் இதோ..

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த வாரம் வருகிற மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் பல்வேறு வகைமைகளில் நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என விரிவாக பார்ப்போம்.

ஹேப்பி ராஜ் - மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள காதல் நகைச்சுவை படம். நாயகியாக ஸ்ரீ கௌரி பிரியாவும், முக்கிய வேடங்களில் அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


சாத்தான்: தி டார்க் - மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் உருவான உளவியல் திகில் படம். ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்தை பின்னணியாக கொண்ட அமானுஷ்ய கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரெட்ரிக் ஜான், அயரா பலக், சந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.


தே வில் கில் யூ - கிரில் சோகோலோவ் இயக்கத்தில் திகில், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கலந்த ஹாலிவுட் படம். நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிக்கொள்ளும் வீட்டுப் பணியாளரின் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில் ஜாஸி பீட்ஸ், டாம் பெல்டன், பத்ரிசியா அர்குவெட் நடித்துள்ளனர்.


நீ பாரெவர் - அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த் மற்றும் மிஸ் சவுத் இந்தியா அர்ச்சனா ரவி நடிப்பில் உருவான காதல் படம். ஜென் ஜி இளைஞர்களின் உறவுச் சிக்கல்களை பேசும் இந்த படத்தில் ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


காணாத சுடர் - ஜனகன் ஏ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "காணாத சுடர்". இதில் தனலட்சுமி, கதிரவாசன், ஷிரிஷா, தட்சணி ஆகியோர் நடித்துள்ளனர். வி. அண்ணாமலை, டி. ஆறுமுகம், ஏ. பகவதி இந்த படத்தினை தயாரித்துள்ளனர். 

இந்த ஐந்து படங்களும் ரசிகர்களிடம் எந்த அளவு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement