• May 18 2026

கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியலையா.? திஷா பதானியின் கடுமையான பதிலடி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கங்குவா, கல்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழும் திஷா பதானி, இந்திய விமானப்படையில் விமானியாக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்துள்ளார். எனினும், 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததன் மூலம் சினிமா பாதையில் அடியெடுத்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது வரையில் 61.5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் சோகமான முகத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் படு வேகமாக பரவின. இதைப் பார்த்த நெட்டிசன்கள், "பொது இடங்களில் சரிசெய்துகொள்ள முடியாத ஆடைகளை ஏன் அணிந்து வர வேண்டும்?" என்று கடுமையாக விமர்சித்தனர்.


இதற்கு பதிலடி கொடுத்த திஷா பதானி, "நடிகைகளை ரசியுங்கள், ஆனால் அவர்கள் அணியும் ஆடைகளை பற்றி மோசமாக விமர்சிக்காதீர்கள். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நடிகைகள் சினிமாவில் நடிக்க வரவில்லை" என்று காட்டமான வார்த்தைகளில் பதிலடி கொடுத்தார்.

இந்த பதிலடி சமூக வலைதளங்களில் பரவலாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இவரது பதிலடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்து வருகிறது. நடிகைகளின் ஆடை விமர்சனம் சரியா தவறா என்ற கேள்வியும் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement