தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் சமீபத்தில் உயிரிழந்தார். இவர் நகைச்சுவை நடிகர், மேடை சிரிப்புரைஞர் மற்றும் தொகுப்பாளர் என பல துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர்.
மதுரை சேர்ந்த இவர், தனது தனித்துவமான நடனம், உடல் மொழி, மிமிக்ரி போன்றவற்றின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமானார். சிறு வேடங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர், அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தனது அறிமுகத்தை நிலை நிறுத்தினார்.
இதுவரையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை குணச்சித்திர வேடங்களில் நடித்தார் ரோபோ சங்கர். மேலும் இலங்கை, லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் நண்பர்களுடன் சேர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையானார்.
இதனால் ரோபோ சங்கரின் உடலுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டது. அண்மையில் மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு பணிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். பின்பே மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இதன்போதே உடலில் ஏற்பட்ட நீச்சத்து குறைபாட்டால் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த நிலையில், மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் போட்டோ ஓபனிங் பங்ஷன் நடந்துள்ளது. அதில் ரோபோ சங்கரின் போட்டோவுக்கு அவருடைய மனைவி பிரியங்கா அலங்காரம் செய்த காட்சி பார்ப்போரை உருக வைத்துள்ளது.
Listen News!