சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்குள் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றி 100 நாட்கள் வெளியுலக தொடர்பில் இருந்து விலகி பிக்பாஸ் வீட்டில் தங்கி இருப்பார்கள். அதன் இறுதியில் மக்களால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிக வரவேற்பு காணப்படுகிறது. முதல் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதன் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த முறை புதிய மாற்றங்களுடன் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் இந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த சீசனில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களை சீக்ரெட் ஆகவே வைத்துள்ளார்கள். இன்று மாலை இந்த சீசன் ஆரம்பிக்கப்பட உள்ள போதே போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஹவுஸ் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் ஏற்கனவே பெட்ரூமில் ஜக்குஸி வைத்திருக்கின்றார்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது. தற்போது கலர் கலராக அலங்கரிக்கப்பட்ட பிக்பாஸ் வீடு ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
Listen News!