• Apr 26 2024

விடுதலை படத்தில் சூரி இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கின்றாரா?- வெளியாகிய மேக்கிங் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

 விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை முதல் பாகத்தின் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் விடுதலை படத்தின் சண்டை காட்சிகள் மேக்கிங் வீடியோவை நடிகர் சூரி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.



Advertisement

Advertisement

Advertisement