• Jan 19 2025

சமூகத்துக்கு தீங்கு.. 10 பைசாவுக்கு பிரயோசனம் இல்ல..!! புஷ்பா 2 பற்றி பிரபலம் பேட்டி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த திரைப்படத்திற்கு தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

புஷ்பா 2 படம் வெளியான முதல் நாளையே 294 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. தென் இந்திய சினிமாவில் புஷ்பா 2 படம் தான் முதலாவதாக ஒரே நாளில் 294 கோடிகளை வசூலித்த முதல் படமாக காணப்படுகின்றது.

d_i_a

புஷ்பா 2 இரண்டாவது நாளில் 449 கலெக்சனும் மூன்றாவது நாளில் மொத்தமாக 600 கோடியையும் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. புஷ்பா 2 படம் கலையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியில் சக்கை போடு போட்டு வருகின்றது. இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஆயிரம் கோடிகளை  வசூலித்திருந்தது.

இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகரும் ஆன பிஸ்மி புஷ்பா 2 படம் பற்றி தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதில் அவர் கூறிய விடயங்கள் வைரலாகி  வருகின்றன.


அதன்படி அவர் கூறுகையில், புஷ்பா 2 படம் 10 பைசாவிற்கும் பிரயோசனம் இல்லாத படம். இது சமூகத்திற்கு என்னை சொல்ல வருகின்றது என்றால் எதுவுமே சொல்லவில்லை. இந்த படம் செம்  மரக் கடத்தலை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டது. இதில் கடத்தல் காரனாக காணப்படும் ஹீரோவை பெரிய லெவெலில் மையப்படுத்தி இந்த படத்தை எடுத்துள்ளார்கள்.

இன்னும் சொல்லப்போனால் புஷ்பா 2 படம் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் படமாக காணப்படுகிறது. ஆனாலும் இது போன்ற படங்களை தான் ஆடியன்ஸ் விரும்புகின்றார்கள் . ஹீரோவை சந்தோஷப்படுத்தும் படமாகவே பார்க்கின்றார்கள் .

மேலும் தெலுங்கு மசாலாவாகவே இந்த படம் காணப்படுகிறது. பான் இந்திய அளவில் இந்த படத்திற்கு பலவாறு கூறப்பட்டாலும் மக்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் இந்த மாதிரியான படம்தான் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement