• May 20 2024

நடிகர் விக்ரம் உடல் நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரமிற்கு திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் விக்ரம்.பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் தான் இவருக்கு சிறப்பான நடிகர் என்ற அங்கீகாரத்தை கொடுத்தது.

அந்த வகையில் இவர் நடிப்பில் பிற்காலத்தில் வெளியான ஐ ,அந்நியன் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இவ்வாறு வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் இறுதியாக மகான் படம் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து கோப்ரா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இந்த நிலையில் சற்று முன்னர் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவரது உடல்நிலை தேற திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கண்டுள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் அந்த செய்தி உண்மை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Chest discomfort காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாகவும், அதற்காக நிபுணர் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் "அவருக்கு மாராடைப்பு ஏற்படவில்லை, உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" எனவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement