• Jan 19 2025

பாக்கியாவை பழிவாங்க நினைத்து உதவி செய்த கோபி,வாயை மூடிக் கொண்ட கிளம்பிய ராதிகா, செம குஷியில் எழில்-Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வேலை முடிந்து வீட்டுக்கு வரும் கோபி வாசலில் ஏதோ பாட் சிமெல் வருவதாக சுற்றிச்சுற்றி பார்க்கின்றார். அப்போது பாக்கியா வாங்கி மூட்டை கட்டி வைத்திருக்கும் பொதியில் இருந்து தான் வருகின்றது என்பதை உணர்ந்து ஈஸ்வரியைக் கத்திக் கூப்பிடுகின்றார். அங்கே ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் வருகின்றனர்.


அவர்கள் வந்தும் அந்த பாட் சிமெல் வருவதால் ஈஸ்வரி உடனே பாக்கியாவைக் கூப்பிட்டு திட்டுகின்றார். அப்போது பாக்கியா, இதெல்லாம் பொருட்கண்காட்சிக்காக வாங்கிய மரக்கறிகள் மாமா, இதெல்லாம் கெட்டுப் போகும் என்று நினைக்கலையே இப்போ என்ன பண்றது மாமா என்று கேட்கின்றார்.

அப்போது ஈஸ்வரி பாக்கியாவைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார். தொடர்ந்து பாக்கியா கிச்சனில் இருந்து யோசிச்சுக் கொண்டிருக்கும் போது எழில், அமிர்தா, செல்வி மூவரும் அதான் நாளைக்கு கண்காட்சிக்காக கட்டிய பணம் பற்றிய தகவல் கிடைச்சிடும் தானே யோசிக்காதீங்க என்று சமாளிக்கின்றார்.


தொடர்ந்து பாக்கியா மணி 7 ஆச்சு இன்னும் டின்னர் செய்யலையே என்று கவலைப்படுவதோடு எனக்கு இன்டைக்கு சமைக்கிற எண்ணமே இல்லை என்கின்றார். இதனால் எழில் இன்டைக்கு நீ சமைக்க வேணாம் கடையில் வாங்கிக்கலாம் என்கின்றார். பாக்கியா சமைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கும் கோபி, செழியன், இனியா,ராதிகா,ஈஸ்வரி நால்வரையும் தனித்தனியாக சந்தித்து டின்னருக்கு ஹொட்டலுக்கு போகலாம் என்கின்றார்.

அவர்களும் சம்மதித்து விட எல்லோரையும் கூட்டிக் கொண்டு போவதோடு பாக்கியா சமைத்த உணவு எல்லாம் வீணாகப் போகின்றது என நினைத்து சந்தோசப்படுகின்றார்.அப்போது ராமமூர்த்தி வந்து நீ கஷ்டப்பட்டு சமைத்து வைக்க அவன் பிளான் பண்ணி தான் டின்னருக்கு ஹொட்டலுக்கு கூட்டிட்டு போகின்றான் எனத் திட்டுகின்றார்.


அப்போது எழில் தாத்தா அம்மா இன்டைக் சமைக்கவே இல்லை,கூட்டிட்டு போனது தான் நல்லம் என்று சொல்ல ராமமூர்த்தி சமைக்கவே இல்லையா, என நினைத்து சந்தோசப்படுவதோடு நாங்களும் இன்டைக்கு ஹொட்டல் சாப்பாடு சாப்பிடுவோம் என்று சொல்ல எழில் எல்லோருக்கும் சாப்பாடு வாங்க போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement