• Mar 12 2026

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜோவிகா முதன்முதலாக அளித்த பேட்டி- ரொம்ப நிம்மதியாக இருக்கிறாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்தோடு சரவண விக்ரமே வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புக்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக ஜோவிகா இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.இவரது வெளியேற்றம் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோவிகா முதன்முதலாக ஒரு பேட்டியளித்துள்ளார்.அதில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளில வந்தது கொஞ்சம் நிம்மதியாக இருக்கு, எனக்கு வாக்களித்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி.

பேச வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு, எச்சரிக்கையாக சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு கண்டிப்பாக அது பற்றி எல்லாம் பேசனும்.இதுவரை எனக்கு சர்ப்போட் பண்ணிய எல்லோருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement