• May 20 2024

தன் குடும்பத்தோடு பழனிச்சாமியைப் பார்த்து கடுப்பான கோபி- கடுமையாக திட்டித் தீர்த்த பாக்கியா- செம குஷியில் இனியா

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்போம்.

பாக்கியா சமைத்த சிக்கன் கறி ராதிகா சமைத்தது என்று கோபி தவறாகப் புரிந்து கொண்டதால் அதைப் பாராட்டி ராதிகாவின் கோபத்துக்குள்ளாகின்றார் கோபி. இதனால் கோபி ரூமுக்குள் இருக்கும் போது ராதிகா வந்து கோபியைத் திட்டுகின்றார். கோபியும் ராதிகாவைச் சமாளிக்கின்றார்.


மேலும் ராதிகாவுக்காக பாக்கியா கிச்சனில் இருக்கும் போது அவரைக் கூப்பிட்டு ராதிகாவோட எதுக்கு நீ சண்டை பிடிச்சிட்டு இருக்கிற இனிமேல் ராதிகாவோட ஏதாவது வச்சுக்கிட்ட என்றால் அவ்வளவு தான் என்று சொல்ல, பதிலுக்கு பாக்கியா திட்டுகின்றார்.அத்தோடு எதுக்காக பழனிசாமி வீட்டுக்கு போனீங்க.

நான் யார் கூட பேசினாலும் பேசலை என்றாலும் அது என்னோட இஷ்டம் அதையெல்லாம் நீங்க ஏன் கேட்கிறீங்க என்று திட்டி அனுப்புகின்றார். தொடர்ந்து அமிர்தாவும் எழிலும் அமிர்தா வீட்டுக்குச் சென்று அவருடைய அப்பாவின் காலில் அடி பட்டதால் அவருடைய நலம் குறிதது விசாரிக்கின்றனர்.


தொடர்ந்து இனியாவுக்கு ஜெனி இருந்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது இனியா டென்ஷனாக இருப்பதால் பாக்கியா அவருக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். இதனை எல்லாம் பார்த்திட்டு இருந்த கோபியும் வந்து இனியாவுக்கு அட்வைஸ்ட் பண்ண பக்கியா அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்று விடுகின்றார்.

பின்னர் விடிந்ததும் இனியா ஸ்கூலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது பழனிச்சாமி எக்ஸ்சாம் நல்லபடியாக எழுத வேண்டும் என்று இனியாவுக்கு ஒரு பேனா கொண்டு வந்து கொடுக்கின்றார். அந்த பேனாவை வாங்கிய இனியா இது ஹோஸ்லி பேனாவாச்சே என சந்தோஷப்பட கோபி நின்று பார்த்து எரிச்சல்படுகின்றார் இததுடன் இன்றைய எப்பிஷோட் முடிகின்றது.

Advertisement

Advertisement