• Jan 22 2026

இந்த சீசனின் இறுதி குறும்படத்தை பகிர்ந்த VJS..பாரு, கம்முக்கு நடந்த கொடுமை.!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன்  இறுதிப் போட்டியை நெருங்கியுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கானா வினோத் வெளியேறினார்.  அதை தொடர்ந்து சாண்ட்ராவும் வெளியேற்றப்பட்டுள்ளார்.  தற்போது டைட்டில் வின்னர் ரேசில் திவ்யா கணேஷ் முன்னிலை வகிக்கின்றார். 

பிக் பாஸ் தமிழ்  9 சீசன் 98 நாட்களை கடந்துள்ளது. இன்னும்  ஒரு சில நாட்களில் கிராண்டு ஃபினாலே நடைபெற உள்ளது .  இந்த சீசனில்  டைட்டில் வின்னராக வினோத் வெற்றி பெறுவார் என பலராலும் நம்பப்பட்டது. பலரும் அவருக்கு தங்களுடைய  வாக்குகளை அளித்து முன்னிலையில் வைத்திருந்தனர். 

ஆனாலும் அவர் தனது குடும்பத்திற்காக 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார். இது பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. அவருடைய ரசிகர்கள் அழுது புலம்பி வீடியோக்களையும் வெளியிட்டனர். 

இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் இந்த சீசனின் இறுதியாக குறும்படம் ஒன்று போட்டுக் காட்டப்பட்டுள்ளது.


அதாவது பிக் பாஸ் வீட்டில் கானா வினோத் இருக்கும்போது, அவரை பிளான் பண்ணி பணப் பெட்டியை எடுக்க வைத்துவிட்டு இப்போ சிரிக்கிறாங்க என  சாண்ட்ரா, விக்ரம் பற்றி வியானா பேசியவற்றை குறும்படமாக போட்டு காட்டியுள்ளார்  விஜய் சேதுபதி.

அதேபோல சபரி முகத்தில் ப்ரிஸ் பேஸை  பார்த்தேன் என  பிரவீன் ராஜ் கூறியுள்ளார். அதனையும் சுட்டிக்காட்டி உள்ளார் விஜய் சேதுபதி. இது பற்றி  அவரிடம் விளக்கம் கேட்க, தான் போட்டியில் இருக்கும் போது நான் சபரியின்  ப்ரிஸ் பேஸை பார்த்தேன் என்று கூறியதில் என்ன தப்பு எனக்  கேட்க,  முதலில் இந்த டோனை கட் பண்ணுங்க என  அவரை நோஸ்கட் பண்ணுகிறார்  விஜய் சேதுபதி. 

இவ்வாறான நிலையில், இந்த ப்ரோமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள்  இத்தனை நாட்களாக பார்வதி வீட்டிற்குள் இருக்கும் போது அவரை சபரி வேண்டும் என்று தான்  தாக்கியதாகவும்,  இதன் போது சாண்ட்ரா அவரின் கழுத்தில்  தாக்கி இருக்கலாம் என்று பேசியதும், 

விக்ரம்  கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திய போதும் எங்கே போனீர்கள்,  வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தாக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்,  ஒவ்வொரு முறையும் சாண்ட்ரா நடிக்கும் போது  அதற்கு குறம்படம் போட்டுக் காட்டி இருக்கலாம் தானே..  இது எல்லாம் பார்வதி கமரூதீனுக்கு  நடந்த கொடுமை என்று  தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement