• May 07 2024

உலக நாயகனோடு போட்டி போட்டு மோத தயாரான கவின்! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக அறிமுகம் ஆன போதே கவினுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகைகளாக மாறினர்.  அதன் பின்னர் அந்த சீரியலில் ஹீரோவாகவே கவின் மாறினார். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இதன் பின்னர் படவாய்ப்புக்களும் கவினுக்கு குவிய ஆரம்பித்தன. அதன்படி இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட், டாடா போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதை தொடர்ந்து, இவர் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரைக் கரம் பிடித்தார். அதன்பின், மீண்டும் தனது படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வருகிறார் கவின்.


கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தில்  இடம்பெற்ற பாடல் ஒன்றும் அண்மையில்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்புகளும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளதாம்.


இந்த நிலையில், கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் படம், மே 10 அல்லது மே 17 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி பொலங்கர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இதேவேளை, கமல்ஹசன் நடிப்பில் உருவாகும் கல்கி 2898AD படமும் மே மாதம் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement