G. V. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படம் எப்போது பெரிய ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் நீண்டநாளாக காத்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு பதிலாக ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படம் வந்துள்ளது. வெளியான முதல் நாளிலிருந்தே இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இளம் தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் எளிமையான கதை, ரசிக்க வைக்கும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை இணைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தை, பிரதீப் ரங்கநாதனிடம் அவர்களின் உதவி இயக்குநராக பணியாற்றிய மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்திருப்பது அவருக்கு ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. புதிய முயற்சியாக இருந்தாலும், கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்ற விதம் பாராட்டைப் பெற்றுள்ளது.
நாயகியாக நடித்துள்ள ஸ்ரீகௌரி பிரியா தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் இயல்பான நடிப்பு மற்றும் திரையில் காணப்படும் ரசனை, படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் தனது வழக்கமான எளிமையான மற்றும் உணர்ச்சி மிக்க நடிப்பால் ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளார்.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்த ஜி.வி. பிரகாஷின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!