• Jun 07 2026

ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு புராண காவியம்.. 'ராமாயணா' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படைப்பாக திகழ்கிறது. புராணக் கதையை நவீன தொழில்நுட்பத்துடன், பிரம்மாண்டமாக திரையில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஆரம்பத்திலிருந்தே ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ரன்வீர் கபூர் மற்றும் சாய்பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ராமர்’ கதாபாத்திரத்தின் சிறப்பு க்ளிம்ப்ஸ் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக ரன்பீர் கபூர் ‘ராமர்’ கதாபாத்திரத்தில் எப்படி காட்சியளிப்பார் என்பதில் ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் காணப்படுகிறது. அவரது லுக், உடை அலங்காரம் மற்றும் கதாபாத்திரத்தின் ஆழம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


Advertisement

Advertisement