நடிகை அனுராதா பகிர்ந்த ஒரு சுவாரஸ்யமான நினைவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அஜித்குமார் குறித்து அவர் கூறிய அனுபவம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது, “ஒரு நாள் திடீரென்று அஜித் சார் எனக்கு போன் செய்தார். ‘எனக்கு ஒரு ஹெல்ப் மேம், சிட்டிசன் படத்துக்கு நக்மா குரலுக்காக பலரை டெஸ்ட் பண்ணிப் பார்த்தோம், எதுவும் சரியாக அமையவில்லை. நீங்கள் வந்து ட்ரை பண்ணலாமா?’ என்று கேட்டார். நான் உடனே டப்பிங் தியேட்டருக்கு சென்றேன். அங்கே அஜித் சார் நேரடியாக இருந்தார். அவர் இரண்டு சீன்கள் பேசச் சொன்னார். நானும் என் திறமையை முழுமையாக பயன்படுத்தி அந்த சீன்களை டப்பிங் செய்தேன். பின்னர் ‘அப்புறமா சொல்றேன்’ என்று அவர் கூறினார்,” என தெரிவித்துள்ளார்.
அதன்பின் சில நாட்களுக்குப் பிறகு தயாரிப்பாளரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், “அஜித் சார் உங்க குரல் தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்,” என தகவல் கிடைத்ததாகவும் அனுராதா கூறியுள்ளார். அதன் பின்னர் தான் அந்த படத்தில் நக்மா நடித்த கதாபாத்திரத்திற்கு தனது குரலை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது எனவும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த சம்பவம், அஜித் குமார் தனது படைப்புகளில் எவ்வளவு கவனமாக ஈடுபடுகிறார் என்பதையும், சிறிய விஷயங்களுக்குக் கூட அவர் தரும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. தற்போது இந்த அனுபவம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
Listen News!