• May 18 2024

பிக்பாஸில் வேற்றுமொழி பிரச்சனை.. கடுமையாக கண்டித்த மோகன்லால் ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பியதில்  இருந்து போட்டியாளர்கள் வேற்று மொழிகளில் பேசுவது என்ற பிரச்சனை சீசன் 1ல் இருந்து இருந்து வருகின்றது. பொதுவாக போட்டியாளர்கள் ஆங்கிலத்தில் அதிகமாக பேசி வந்தனர் என்பதும் அவ்வப்போது பிக் பாஸ் மற்றும் கமல்ஹாசன் அதனை சுட்டிக்காட்டிய தமிழில் பேச வைத்தனர் என்பது தெரிந்ததே.

அத்தோடு  பிக்பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் மட்டும் மலையாளத்தில் ஷெரினா மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் அடிக்கடி பேசி வந்தார்கள். ஏற்கனவே பிக்பாஸ் இதுகுறித்து இருவருக்கும் எச்சரிக்கை செய்த நிலையிலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து மலையாளத்தில் தான் பேசி வந்தார்கள்



மேலும் இந்த நிலையில் தாங்கள் செய்யும் தவறு அவர்கள் மனதில் பதியும் வகையில் நேற்று ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டபோது மலையாளத்தில் அவருடைய பெயரை எழுதி கமல்ஹாசன் காட்டினார். இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தமிழில் மட்டுமே பேச வேண்டுமென்பதை அனைவர் மனதிலும் பதியும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.


ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் மலையாள நிகழ்ச்சியில் மோகன்லால் இதை வேறு விதமாக கையாண்டிருந்தார். அத்தோடு ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசிய ஒரு போட்டியாளரை அவர் கடுமையாக கண்டித்தார். மேலும்  இது ஒரு மலையாள நிகழ்ச்சி. இந்த ஷோவில் ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகள் பேசுவதற்கு அனுமதி இல்லை. மலையாளம் பேசுவதாக இருந்தால் நீங்கள் அங்கே போட்டியாளராக இருக்கலாம், இல்லையெனில் நீங்கள் இங்கே வந்து விடுங்கள் என்று மோகன்லால் கண்டிப்பாக தெரிவித்தார்.


வேற்றுமொழி பேசும் பிரச்சனையை அணுகுவதில் மோகன்லாலின் கண்டிப்பான பாணியும் கமல்ஹாசனின் எதார்த்தமான பாணியும் முற்றிலும் வெவ்வேறாக இருந்தது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


Advertisement

Advertisement