• Apr 27 2024

கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரபலம்..அட இவங்களா..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.


மேலும் இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும் வென்றுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் நடிகர் மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.


மேலும் இவரின் திரைத்துறை வாழ்க்கையானது தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருதும் பெற்றார்.


மேலும் உலகளவில் அதிகளவான ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது இப் படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாக அமைந்தது கமலுக்கு.


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டினார். அதில் நடிகை ராதிகா கலந்து கொண்டு கமலுடன் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இதோ அந்த அழகிய புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement