• Jan 19 2025

ஈழத்து குயில்களை தொடர்ந்து சன் நியூஸில் பேமஸான யாழ் தாத்தா! திறமைக்கு குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.

கடந்த வருடம் இடம்பெற்ற சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, அதன் இறுதியில் ஈழத்து குயிலான கில்மிஷா டைட்டில் வின்னராக வெற்றி மகுடம் சூடிக்கொண்டார்.

இதை தொடர்ந்து இதில் பங்குபற்றிய ஈழத்து குயில்களான அசானி, கில்மிஷா ஆகிய இருவரும் தற்போது இலங்கையில் பெரும் புகழ்ச்சியோடு கடும் பிசியாக தமது நாட்களை கடக்கின்றனர்.


இந்த நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரத்தினம் தில்லை ராஜா என்ற தாத்தா ஒருவரின் பாடல் சன் நியூஸில் இடம்பெற்று வைரலாகியுள்ளது.

யாழில் நாளாந்தம் கூலி தொழில் செய்யும் குடும்பத்தில் வசிக்கும் குறித்த தாத்தா, தனது பிள்ளைகளின் உதவியுடன் இதுவரை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

69 வயதுடைய குறித்த தாத்தாவுக்கு, பல பிரபல பாடகர்களின் குரலை போல பாடும் திறமை காணப்படுகின்றது. தற்போது தனது பாடல் திறமை மூலம் சன் நியூஸ் வரை பேமஸ் ஆகி உள்ளார். இதை அறிந்த பலரும் தமது  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது குடும்பத்தின் வறுமை காரணமாக 13 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, கூலி வேலைக்குச் சென்றதாக தனது வறுமையை எடுத்துக் கூறியுள்ளார்.

இதேவேளை தனது வயதின் காரணமாக சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அதை சரியாக பயன்படுத்திக்  கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.







Advertisement

Advertisement