• May 05 2026

அல்லுஅர்ஜூன் பான்ஸ்க்கு திருவிழாதான்! ஹோலுவுட் படங்களுக்கே டஃப் கொடுக்கும் புஸ்பா 2 டீசர் இதோ !

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் விஜய் , அஜித் என பல முன்னணி நடிகர்கள் மாஸ் ஹீரோவாக இருப்பது போன்று தெலுங்கிலும் பல ஆக்சன் ஹீரோக்கள் உள்ளனர். பிரபாஸ் , ராம்சரண் , மகேஷ் பாபு வரிசையில் முன்னணியாக இருப்பவர் அல்லுஅர்ஜுன் ஆவார். இவர் தெலுங்கில் முன்னணியாக இருப்பதோடு புஷ்பா என்ற மெகா ஹிட் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.



சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஸ்மிகா மந்தனா இணைந்து நடித்த பாண் இந்தியா திரைப்படமே புஷ்பா ஆகும். செம்மர கடத்தலை மையமாக கொண்டு எடுக்க பட்ட குறித்த திரைப்படத்தில் பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த நிலையிலேயே குறித்த படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி உள்ளது.



முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்தே அசத்தலாக உருவாகி இருக்கும் புஸ்பா 2 படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. குறித்த டீசரில் பெண்களை போன்று சாரி அணிந்து கொண்டு தெய்வ வேடத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன் வில்லன்களை அடிக்கும் ஆக்சன் காட்சி காணப்படுகின்றது. மற்றும் டீச்சரின் முடிவில் குறித்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement