• Sep 19 2024

சொகுசு கார் வாங்கிய ஃபகத் ஃபாசில்...எத்தனை கோடி தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு தான் தனது காதல் மனைவி நஸ்ரியாவிற்கு Python Green Porsche 911 Carrera S காரை பரிசாக அளித்தார் ஃபகத். மேலும் இந்த கார் இந்தியாவில் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. நடிகர்கள் ராம் கபூர், மம்தா மோகன்தாஸ், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பின்னர் ஃபகத் அந்த காரை வாங்கினார்.

எனினும் தற்போது மற்றொரு காஸ்ட்லி கார் ஒன்றை வாங்கியுள்ளார் ஃபகத். இதன் விலை அதிகம் இல்லை. ரூ.3.15 கோடி மட்டும் தான். மேலும்  இந்த காரை தற்போது வாங்கியதற்கு, ஃபகத் - நஸ்ரியா தங்களின் திருமண நாள் ஸ்பெஷலாக தான் இந்த காரை வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஃபகத்- நஸ்ரியா தம்பதிக்கு திருமணமாகி இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதை கொண்டாடுவதற்காக தான் இந்த காஸ்ட்லி கார். அத்தோடு இவ் வருடத்திற்கு ஒரு காஸ்ட்லி கார் வாங்கினாலும், இவர்கள் இவரும் ஜாலி ரைடு போவது என்னவோ சைக்கிளில் தான்.திருமண நாளை முன்னிட்டு ஜாலியாக இருவரும் சைக்களில் சுற்றி வரும் வீடியோவை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

திருமணமாகி அதற்குள் 8 ஆண்டுகள் ஓடி விட்டதாகவும் ஆச்சரியமாக தெரிவித்துள்ளனர்.மேலும்  இந்த பதிவிற்கு இவர்களுக்கு வாழ்த்துக்களும், லைக்குகளும் குவிந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிந்து வருகின்றனர். 

ஃபகத் ஃபாசில் தற்போது தமிழில் மாமன்னன், தெலுங்கில் புஷ்பா, மலையாளத்தில் பாட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அத்தோடு இவரது மனைவியும் பிரபல நடிகையுமான நஸ்ரியாக கடைசியாக அன்டே சுந்தரனிகி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ் உள்ளட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.இவர்கள் இருவரும் படங்களில் நடிப்பதுடன் சில படங்களை தயாரித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement