• Nov 23 2025

வெயிலில் காத்திருந்த ரசிகர்கள்!விஜயை பார்த்ததும் மகிழ்ச்சியில் வீடு திரும்பிய ரசிகர்கள்!

Roshika / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் மாநில அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தமிழக வெற்றி  கழகம்’ (தவெக) சார்பில் மதுரையில் இன்று நடைபெற்ற மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அவரது பங்கேற்பு மட்டும் அல்லாமல், இந்த மாநாட்டில் விஜய் செய்த 'ரம் வாக்' ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


காலை முதல் மதுரையின் வெப்பத்தை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜயைக் காணும் ஆவலுடன் நிகழ்வுக்கலை காத்திருந்தனர். பல மணி நேரங்கள் காத்திருந்த பின், மேடையில் விஜய் தோன்றி, தனது அழகிய ஆட்டிட்யூட்டுடன் நடைபோட்டதை ரசிகர்கள் கைதட்டும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். 


விஜய் மேடையில் தனது உரையை முடித்த பின்பும், ரசிகர்கள் சிறிது நேரம் வரை உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் நிகழ்ச்சியின் முக்கிய பகுதி முடிந்ததும், கூட்டம் கூட்டமாகக் கலையத் தொடங்கியது. நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பு சிறப்பாக இருந்தாலும், வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள், விஜயைக் பார்த்ததன் பின், திருப்தியுடன் நிகழ்விடத்தை விட்டு வெளியேறினர்.

Advertisement

Advertisement