• Sep 20 2024

அடுத்தடுத்து படங்களில் கெமிட்டாகும் விஜய்-குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அதற்கு ஏற்றாற் போல ரசிகர்களும் அவருக்கென்று பெரிய பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது

இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வருகின்றார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அத்தோடு ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகுமுன்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் விஜய் கூட்டணி அமைக்கவுள்ளார். மேலும் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.

எனினும் இதனை அவர் சமீபத்தில் உறுதிசெய்தார். மேலும் தளபதி 67 திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விஜய்யை காட்டுமென்றும், முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக இயக்குநர் அட்லீ விஜய்யுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவிவருகிறது. தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி தளபதி 68 படத்தில் இணையவுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தளபதி 66 படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்தடுத்து தளபதி 67 மற்றும் தளபதி 68 படங்களில் கமிட்டானது சினிமா வட்டாரங்களில் ஆச்சர்யமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement