• Jun 07 2026

இணையத்தை தெறிக்கவிடப்போகும் தனுஷ்.. 'கர' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கர’ மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கும் அடுத்த படமாக இருப்பதால், இந்த திரைப்படம் மீது கூடுதல் கவனம் திரண்டுள்ளது.

‘கர’ படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் சுராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையை G. V. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.


ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கர’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிரெய்லர் வெளியீடு ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் கதைக்களம், தனுஷின் கதாபாத்திரம் மற்றும் விக்னேஷ் ராஜாவின் இயக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement