• Jul 13 2026

கேக்கா? இல்ல சாதனையா?... 52 அடி நீளத்தில் விஜய்க்கு பிரமாண்ட சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழகத்தின் முதலமைச்சருமான விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.. ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஒரு பிரமாண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, அவருக்காக 52 அடி நீளமுள்ள கேக் தயாரிக்கப்பட்டு வெட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த அந்த நிகழ்வில், விஜயின் உருவப்படங்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்து பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மத்தியில் 52 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்ட கேக் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


கேக் வெட்டப்பட்டதும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும் கேக் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் விஜயின் பிறந்தநாளை ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடி வரும் நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற 52 அடி கேக் வெட்டும் நிகழ்வு மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இதனை பார்த்த பலரும், விஜய் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடுதான் இது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மட்டுமின்றி, பல இடங்களில் அன்னதானம், இரத்ததானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த ஆண்டு விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரசிகர்களிடையே மேலும் சிறப்பான ஒன்றாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement