• Sep 21 2024

தேசிய விருதினைத் தட்டிச் சென்ற சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்- செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியளவில் வெளியான சிறந்த படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

அதன்படி தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம் ஆகிய படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் இவைகள் தேசிய விருதுக்கு விண்ணப்பித்திருந்தன.

இந்த இரண்டு படங்களுக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சூரரைப் போற்று, திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி சூரரை போற்று படத்திற்காக ,

  • சிறந்த நடிகர் - சூர்யா
  • சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி
  • சிறந்த பின்னணி இசை - ஜி. வி. பிரகாஷ்குமார்
  • சிறந்த திரைப்படம் - சூரரை போற்று
  • சிறந்த திரைக்கதை - சூரரை போற்று கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement