• Jun 02 2024

"அதற்கும் நான் மிகப்பெரிய தொகை கொடுத்திருக்கேன்"…சமந்தா கூறிய பதிலைக் கேட்டு குழப்பமடைந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்படும் பிரபலங்களில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். இவரின் புன்னகை ததும்பிய முகத்தினையும், உணர்ச்சிபூர்வமான நடிப்பினையும் ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு.

நடிகை சமந்தா விளம்பரப் படங்களில் நடித்தாலும் சரி, போட்டோ, வீடியோக்களில் நடித்திருந்தாலும் சரி அது உடனே ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவிடும். மேலும் இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். எனினும் இவர்கள் இருவரிற்குமிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக இவர்கள் இருவரும் விவாகரைத்துப் பெற்றுப் பிரிந்து விட்டார்கள். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பலவிதமாக பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் இந்தித் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காபி வித் கரண் என்ற ஷோவில் பங்கேற்று இருக்கிறார். அந்த செட்டுக்குள் அவர் உள்ளே வரும்போதே நடிகர் அக்ஷய்குமார் அவரை கையில் தூக்கிக்கொண்டு வந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆனது.

அந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தாவிடம் ஒரு விஷயம் கரண் ஜோகர் கேட்டார், அதற்கு சமந்தா கூறிய பதில் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது Ormax வெளியிட்டு வரும் டாப் நடிகைகள் லிஸ்டில் சமந்தா தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். அது பற்றி கேட்டதற்கு நடிகை சமந்தா "உண்மையாக சொல்கிறேன், நான் அங்கு ஒருவருக்கு காசு கொடுக்கிறேன்" என கொஞ்சமும் தயக்கமின்றி கூறி இருக்கிறார்.

மேலும் அந்த லிஸ்ட்டில் ஆலியா பட்டை பின்னுக்கு தள்ளியது பற்றி கேட்டதற்கு அதற்கும் தான் மிகப்பெரிய தொகை கொடுத்தேன் எனத் தெரிவித்து இருக்கிறார். இவர் கூறிய இந்தப் பதிலானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement