தமிழ் தொலைக்காட்சியின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியாக விளங்கும் பிக்பாஸ் சீசன் 9, தற்போது ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நிகழும் சண்டைகள், உணர்ச்சிகள், டாஸ்க் போட்டிகள் ஆகியவை இவ்வாண்டு நிகழ்ச்சியை மிக அதிகமான விவாதங்களுக்கு தள்ளியுள்ளன.

குறிப்பாக, இந்த சீசனின் ஹோஸ்ட் நடிகர் விஜய் சேதுபதி தனது நகைச்சுவை தன்மையால் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருவதால், TRP மேலும் உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், இந்த வாரத்திற்கான ஏவிக்சன் குறித்து பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. வெளியான தகவல்களின் படி, இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் அதிக வாய்ப்புடன் வெளியேற்றப்படுகின்றார் என கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியாகியவுடன், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நகைச்சுவை, எளிமை, வித்தியாசமான அணுகுமுறை ஆகியவற்றால் ரசிகர்களை ஈர்த்த வாட்டர் மெலன் ஸ்டார், இந்த வாரம் ஏவிக்சன் லிஸ்டில் இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பாராத செய்தியாக அமைந்துள்ளது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!