• Sep 09 2024

தங்கலான், கங்குவா படங்கள் வெளியிடுவதில் நிபந்தனை... சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவு... அதிர்ச்சியில் ரசிகர்கள்...

Thisnugan / 4 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் அக்டோபர் பத்தாம் தேதி ஆயுத பூஜைக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் கங்குவா படத்தை தயாரித்துள்ள ஞானவேல் ராஜா அவர்களே விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தையும் தயாரித்திருப்பதால், ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் தங்கலான் படத்துடன் கங்குவா டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Suriya's Kanguva trailer to be released with Chiyaan Vikram-starrer  Thangalaan?

தங்கலான் படத்தின் இடைவெளியின் போது கங்குவா டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கலான், கங்குவா படங்களை வெளியிட உயர்நிதிமன்றம்  நிபந்தனை விடுத்துள்ளது. 

விக்ரம் நடித்துள்ள தங்கலான் மற்றும் சூர்யாவின் கங்குவா ஆகிய படங்களை வெளியிடும் முன் தலா 1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement