தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் பிறந்த நாளான மே 1ம் திகதியை அவருடைய ரசிகர்கள் ஒரு திருவிழா தினமாக கொண்டாடி வருவது வழக்கம். ஆண்டு தோறும் , அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
இந்த ஆண்டு, அஜித் பிறந்த நாளையொட்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரட்டை சலுகை தரும் வகையில் இரண்டு புதிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் சூர்யாவின் ரெட்ரோ படம் மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் பாமிலி போன்ற படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.
இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் தகவல்கள் தற்போது சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா தனது கதாபாத்திரத் தேர்வில் மாறுபாடுகளை காட்டி வரும் முன்னணி நடிகர்.
இதே நாளில் வெளியாகும் டூரிஸ்ட் பாமிலி படத்தில் சசிகுமார் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறாக இரண்டு முக்கியமான நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருவது பொதுவாக ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் திரையரங்குகளில் பிளவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
Listen News!