தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான "விடாமுயற்சி" படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்தது. வெளியான நாளிலிருந்தே, படம் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், படத்தின் வசூல் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பலரும் படம் பெரிய அளவில் வசூல் செய்துள்ளது என்று கூறினாலும், சிலர் இதை மறுத்து, உண்மையான வசூல் மிக குறைவாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்கள், லைகா நிறுவனம், இதுகுறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.
படம் முதல் இரண்டு வாரங்களில் வசூல் சாதனை படைத்ததாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அதற்கே எதிராக உண்மையான நிலைமை வேறுபட்டதாக இருக்கலாம் என்பதும் பேசப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம், இப்படத்தின் வசூலைப் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஏனெனில் அவ்வாறு வெளியிடுவதன் மூலம் அஜித்தின் பெயர் கெட்டுவிடும் அதனால் தான் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அத்துடன் விடாமுயற்சி படம் பெரிய அளவில் ஹிந்தியில் பேசப்படவில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.
Listen News!