• Sep 28 2025

"கருப்பு" படத்தின் போஸ்டர் வெளியிட்ட படக்குழு..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

திறமைமிகு நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கான ஒரு சிறப்பு அன்பளிப்பாக ‘கருப்பு’ படக்குழுவினரால் today (ஜூலை 22) ஒரு மெகா ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் சூர்யாவின் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதுடன், புதிய போஸ்டரின் வெளியீடு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


அதனுடன், ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்கள் தற்போது மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். படக்குழுவின் இந்த அறிவிப்பு, சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மேலும் ஒரு விதமான உற்சாகத்தையும் கூட்டியுள்ளது.


‘கருப்பு’ திரைப்படம் ஒரு தீவிரமான சமூக அரசியல் பாணியில் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது. இப்படத்தை எழுதி இயக்கும் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி தொழில்நுட்பக் குழு குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்  என எதிர் பார்க்கபடுகின்றது.  இந்நிலையில்,  பிடித்த நடிகருக்கு பிறந்தநாளன்று இப்படமான சிறப்பு பரிசாக போஸ்டரும், டீசர் அறிவிப்பும் கிடைத்துள்ளதே ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷமாகியுள்ளது.

Advertisement

Advertisement