உலக திரைப்படக் களத்தில் முத்திரை பதித்த ஹாலிவூட் நடிகர் வால் கில்மர், நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டைப் பகுதியில் இருந்த புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கில்மர், கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது உயிரிழப்பு குறித்து அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமான தகவலினை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இது ஹாலிவூட் சினிமா ரசிகர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
1980களில் ஹாலிவூட் திரையுலகிற்குள் அறிமுகமான கில்மர் "Top gun" படத்தில் ஐஸ்மான் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கியிருந்தார். வால் கில்மரின் மறைவுக்குப் பிறகு பல ஹாலிவூட் பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது சோகத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!