• Apr 03 2025

விக்கி ஹவுசலுக்குப் பதிலாக விஜய்சேதுபதிக்கு கதை மாற்றிய இயக்குநர்..!எதற்காகத் தெரியுமா?

subiththira / 22 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தற்பொழுது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய செய்தி ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்கவிருந்த பாலிவுட் ஹீரோ விக்கி ஹவுசல், தனது அண்மைய பட வெற்றிக்குப் பிறகு அப்படத்தில் நடிப்பதற்கான மனநிலையை மாற்றியுள்ளார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.


தெலுங்கு சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் பூரி ஜெகநாத் பல ஹிட் படங்களைக் கொடுத்து தெலுங்கில் மட்டுமல்லாது ஹிந்தி மற்றும் தமிழிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த வகையில், பூரி ஜெகநாத் தனது அடுத்த படத்திற்கு விக்கி ஹவுசலை ஹீரோவாகத் தேர்வு செய்ததாக தகவல்கள் பரவியிருந்தன. இந்த கூட்டணி பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


விக்கி ஹவுசல் நடித்த "சாவா" திரைப்படம், எதிர்பாராத அளவில் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் அவர் எடுத்துள்ள கதாபாத்திரம் மற்றும் நேர்த்தியான நடிப்பு ஆகியவை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த வெற்றியின் பின், விக்கி தனது நடிப்பு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்ததாகவும், அதனால் பூரி ஜெகநாதின் படத்திலிருந்து விலகியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. விக்கி ஹவுசல் இத்திட்டத்திலிருந்து விலகியதை அடுத்து, பூரி ஜெகநாத் அந்தக் கதையை விஜய் சேதுபதிக்கு கூறியுள்ளார் என்றும், விஜய் சேதுபதி அக்கதையில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் தற்பொழுது சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Advertisement

Advertisement