• Sep 20 2024

ரஜினிகாந்தைத் தொடர்ந்து ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் டிஸ்கவரி சேனில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’. இந்த நிகழ்ச்சியானது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகின்றது. அந்த வகையில் இதில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அதே போல கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்ட இந்திய பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிதான். அதற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த இரு எபிசோட்களும் இந்தியாவில் பெரிய அளவில் கவனம் பெற்றன.

இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் கலந்துகொள்கிறார். இதன் டிரைலர் நாளை வெளியாகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement