• May 20 2024

திருமணம் நடக்கப் போகும் நாளில் திடீரென உயிரிழந்த பிரபல பாடகரின் காதலி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டிஷ் நாட்டில் புகழ் பெற்ற பாடகராக வலம் வருபவர் தான் பாடகர் டாம் மான். இவர் டேனிலி ஹாம்சன் என்பவரைக் காதலித்து வந்தார்.

இருவரும் 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியிருந்தனர். ஆனால் கொரோனாத் தொற்றின் பரவல் காரணமாக இவர்களின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஜோடிக்கு 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் போவி என்ற மகன் பிறந்தான்.

இந்நிலையில் ஜுன் 18 ம் தேதியன்று இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.ஆனால் அன்று காலை ஹாம்சன் திடீரென மரணமடைந்தார். 34 வயதாகும் ஹாம்ப்சனுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. இருந்தாலும் அவரின் இந்த திடீர் மரணத்திற்கு என்ன காரணம் என வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் டாம் மான், தனது மகன் போவியுடன், காதலி ஹாம்சனின் போட்டோவுடன் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உருக்கமான நீண்ட பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் 28 வயதாகும் டாம் தனது பதிவில், நான் இந்த வார்த்தைகளை எழுதுகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் என்னுடைய டார்லிங் டேனிலி, என்னுடைய சிறந்த தோழி, எனக்கு எல்லாமும், வாழ்க்கையின் ஒட்டுமொத்த அன்புமாக இருந்த அவர் ஜுன் 18 ம் தேதி, சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.

எங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாளாக இருக்கும் என நினைத்த நாள் மொத்தமாக தலைகீழாக மாறி, அத்தனையும் முடிந்து விட்டது. நான் கண்ணீர் கடலில் மூழ்கியதை போல் அழுதேன். நாங்கள் முதல் முறையாக சந்தித்தது, நடனமாடியது என எதையும் மறக்க முடியாது. என்னுடைய ஒட்டுமொத்த உலகமே நீ தான் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். என் வாழ்வில் கிடைத்த மிகச் சிறப்பான விஷயம் என்றால் அது டேனிலி தான். என்னுடைய ஒட்டுமொத்த காதலையும் சொல்வதின் அடையாளமாக இந்த மோதிரத்தை நான் அணிவிப்பேன் என நினைத்தேன். ஆனால் இப்படி ஆகும் என நான் நினைக்கவில்லை. ஹாம்சனின் மறைவால் மொத்தமாக நொறுங்கி போய் விட்டேன். ஒரு தந்தையாக போவியை நல்லபடியாக வளர்க்க என்னுடைய அத்தனை அன்யையும் கொடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

அவனின் அம்மா எவ்வளவு அற்புதமானவள் என்பதை நிச்சயம் அவன் தெரிந்து கொள்ளும் படி செய்வேன். உள்ளேயும், வெளியேயும் மிகவும்அழகானவர் என்றால் அது டேனிலி தான். மிக அற்புதமான ஆத்மா. உனது பிரிவை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன். நான் எங்கு இருந்தாலும் அந்த இடத்தை வெளிச்சமாக்குவது நீ தான். நீ இல்லாமல் என் உலகம் என்பது எதுவும் இல்லை என மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement