• May 13 2024

பரபரக்கும் பிக்பாஸ் பணிகள்-இதுவரை தேர்வான 10 போட்டியாளர்கள்..யார் யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியை பற்றி கூற வேண்டுமென்றால், முன் பின் தெரியாத 16 பிரபலங்களை ஒரே வீட்டில் அடைத்து வைத்து, அதில் ஒவ்வொரு வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைந்த ஓட்டுக்களை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இவற்றையெல்லாம் கடந்த 100 நாட்கள் யார் அந்த வீட்டில் தாக்குபிடிக்கிறார்களோ அவரே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் புகழ் வெளிச்சம் கிடைக்கும், அதை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் அவர்களின் கெரியர் அமைந்திருக்கும். 

இவ்வாறுஇருக்கையில் இந்த நிகழ்ச்சி 5சீகன்கள் முடிவடைந்து தற்போது 6 சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த சீசனில் பொதுமக்களில் இருந்தும் ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆடிஷனும் நடைபெற உள்ளது.



மேலும் இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதுவரை 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



அதன்படி தொகுப்பாளர் ரக்‌ஷன், தொகுப்பாளினி டிடி, இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா, பாடகி ராஜ லட்சுமி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார், சீரியல் நடிகைகள் ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை ஷில்பா மஞ்சுநாத் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


அத்தோடு  வருகிற அக்டோபர் 2-ந் தேதி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement