• Feb 12 2026

ஒவ்வொரு நொடியும் ஒரு ஆசீர்வாதம்..! நட்சத்திரனின் அழகிய தருணங்களை பகிர்ந்த இந்திரஜா

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் ரோபோ சங்கர் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மிமிக்ரி, டைமிங் காமெடி, நடனம் மற்றும் பல திறமைகளில் சாதனை படைத்த இவர், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலே புகழ் பெற்றார்.

உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக பல சிகிச்சைகள் பெற்றார், பின்னர் முழுமையாக மது பழக்கங்களை ஒழித்து குடும்பத்துக்கும் திரையிலும் கவனம் செலுத்தினார். 


ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நேற்றைய தினம் ,  ரோபோ சங்கர் உயிரோடு இருந்தபோது பேரனுக்கு அன்போடு உணவு ஊட்டும் வீடியோவை பகிர்ந்து இருந்தார். அது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் நட்சத்திரன் உருவானத்தில் இருந்து தற்போது வரையில் எடுத்த அழகிய தருணங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார். தற்போது பலரும் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement