சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பானது. விஜயா வீட்டிற்கு வந்த வட்டிக்காரர், சிந்தாமணி சொல்லிக் கொடுத்த திட்டத்தின் பேரில் ஏமாற்றி கையெழுத்து வாங்குகிறார். அப்போது, விஜயா வீட்டில் ரோகிணியின் புகைப்படத்தை எரித்த சம்பவத்தை சிந்தாமணியிடம் அவர் சொல்ல, அதையே ஒரு ஆயுதமாக மாற்றுகிறார் சிந்தாமணி. இதனை வைத்து ரோகிணியிடம் நடந்த விஷயங்களை சொல்லி, கவலைப்படுவது போல நடித்து கேம் பிளே செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து, சிட்டியிடம் வேலை பார்த்த நண்பரை சத்யா சந்திக்கிறார். அவர் தனது மனைவியுடன் புதிய தொழில் தொடங்க இருப்பதாகவும், சிட்டியிடமிருந்து விலகி விட்டதாகவும் கூறுகிறார். இதனால் மனமிரங்கி, சத்யா அவருக்கு பண உதவி செய்ய முன்வருகிறார். அப்போது, முக்கியமான உண்மை வெளிவருகிறது. சிட்டியுடன் இருந்தபோது, ரோகிணி கார் சாவியை கொடுத்து தான் சிட்டி, முத்துவை ஆக்சிடென்ட் செய்ய முயன்றார் என்ற அதிர்ச்சி தகவலை அந்த நண்பர் தெரிவிக்கிறார்.

இந்த உண்மையை சத்யா, மீனா மற்றும் முத்துவிடம் தெரிவிக்க, வீட்டில் உள்ள அனைவரும் ரோகிணியை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என உறுதியாக நிற்கிறார்கள். மேலும் வித்யாவும் வந்து ரோகிணி செய்த எல்லா தப்பையும் புட்டு புட்டு வைக்கிறார். எனினும் அண்ணாமலை மட்டும் கிரிஷை நினைத்து சிறிது தயக்கம் காட்டினாலும், இனிமேல் ரோகிணி இந்த வீட்டின் மருமகள் இல்லை, உடனடியாக டிவோர்ஸ் வாங்க வேண்டும் என உறுதியான முடிவை எடுக்கிறார்.
இதற்கிடையில், பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, தனியாக இருந்து கஷ்டப்படுவதாக கூறி பார்வதியிடம் அழுது புலம்புகிறார். அங்கு சிந்தாமணியும் இருப்பதால், பார்வதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவர் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். மேலும், விஜயாவின் கடனை அடைக்க தேவையான பணத்தை தான் தருவதாக சிந்தாமணி உறுதியளிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, பார்வதி மனோஜுக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுப்பதற்காக ஒரு வழக்கறிஞரை சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அங்கு விஜயா, மனோஜின் கதைகளை கூற, வழக்கறிஞர் அதைக் கேட்டு சிரிக்கிறார்.
மொத்தத்தில், ரோகிணியின் ரகசியங்கள் வெளிவந்து, முத்துவின் அதிரடி முடிவு மற்றும் சிந்தாமணியின் மாஸ்டர் பிளான் என இன்றைய எபிசோட் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்தது.
Listen News!