• Jan 19 2025

உங்கள திருமணம் செய்தும் ஒன்னும் நடக்கல.. ஹனிமூனுக்கு உடனே நாள் குறித்த பவர் ஸ்டார்?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்ல வேண்டும்.

வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பல சிக்கல்களின் காரணமாக சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார். அது மட்டும் இன்றி குடும்பத்தாரிடமிருந்தும் விலகி தற்போது வரையில் தனியாக வாழ்ந்து வருகின்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் நடிப்பதற்கு கம்மிட்டானார். வனிதாவின் மகள் ஜோவிகாவும் இறுதியாக நடந்த பிக் பாஸ் சீசன் 7 கலந்து கொண்டு இருந்தார்.

தற்போது தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் நடிக்கும் அந்தகன் படத்திலும் வனிதா முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார். இது தொடர்பான பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டிருந்தார்.


இந்த நிலையில், சினிமா மேடை ஒன்றில் வனிதா பேசிய விடயம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வனிதா மாலை போடுவது போல ஒரு போஸ்டர் வெளியானது. அதனைப் பார்த்த சிலர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று சர்ச்சையை கிளப்பி விட்டார்கள். ஆனால் அவர்கள் இருவரும் நடித்த பிக்கப் படத்தின் போஸ்டர் தான் அது என்பது உறுதியானது.

தற்போது வனிதா நடித்த வைஜயந்தி ஐபிஎஸ் என்ற படத்தின் விழா சென்னையில் நடைபெற்ற போது அதில் பவர் ஸ்டார் கலந்து கொண்டுள்ளார்.

அதில் பேசிய பவர் ஸ்டார், நான் எனது தோழியை நீண்ட நாளைக்கு பிறகு சந்தித்துள்ளேன் என்று கூறும் போது இடையில் பேசிய வனிதா, நான் தோழியா? நமக்கு திருமணமே செய்து விட்டார்கள். நான் வெளியூருக்கு போகவே நீங்கள் பவர்ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டீர்களா என்று கேட்கிறார்கள். நான் அதற்கு இல்லை இல்லை நான் பவர் ஸ்டார் சீனிவாசனை தான் திருமணம் செய்தேன் என்று சொல்வேன். உங்களை திருமணம் செய்து ஒன்றும் நடக்கவில்லை என்று கலாய்த்தார்.

அதற்கு பவர் ஸ்டாரோ என்ன செய்வது நீங்கள் தாய்லாந்து  போறீங்க.. நானும் இங்கு இருப்பதில்லை ஒரு நாள் ஹனிமுனுக்கு நாள் குறித்து விடலாம் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

Advertisement

Advertisement