• Jan 19 2025

சிம்பு யார் குடியையும் கெடுக்கல.. அவரை தான் பல நடிகைகள் ஏமாற்றினாங்க..! பிரபலம் பகிர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக காணப்படும் நடிகர் சிம்பு, தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்ததாக தனது எக்ஸ் தல பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சிம்புவின் நடிப்பு மட்டுமின்றி இசை, பாடல் எழுவது என பல கோணங்களில் திகழ்ந்து வருகின்றார். இடையில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார் சிம்பு. ஆன்மீகப் பக்கம் அவரது கவனம் சென்றது. சினிமாவில் கவனக்குறைவாக இருந்தார். இதனாலேயே வரிசையாக தோல்வி படங்களை கொடுத்தார்.

ஆனாலும் ஒரு கட்டத்தில் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அந்த படத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்பு நடித்த பத்து தல திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றது.


இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா சிம்பு பற்றி பேசுகையில், சிம்பு திறமையான நடிகர். அவருடன் நடித்தத்தான் நடிகைகள் ஆசைப்படுவார்கள். ஏனெனில் சிம்பு சிறு வயதிலிருந்து நடித்து வருகின்றார். அவரிடம் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். சிம்பு மீது பலர் குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள். ஆனால் சிம்புவைத்தான் நடிகைகள் ஏமாற்றி இருக்கின்றார்களே தவிர சிம்பு யாரையும் ஏமாற்றியதில்லை. இதுவரை ஒரு நடிகை கூட சிம்பு என்னை ஏமாற்றிவிட்டார் என்று புகார் சொன்னதே கிடையாது. நிறைய காதல் தோல்விகளை கடந்து இன்றும் தனித்து நிற்கின்றார் சிம்பு.

டிஆரால் வளர்க்கப்பட்டவர் சிம்பு அவரால் இங்கு வாழ்ந்தவர்கள் தான் அதிகம் அழிந்தவர்கள் இல்லை. சிம்பு காதல் வயப்படுவது இயல்புதான். அது ஒரு ஆணுக்கு உள்ள இயற்கை. ஆனால் சிம்பு யார் குடியையும் கெடுத்து விட்டார் என்று இதுவரை யாரும் புகார் செய்ததில்லை. ஒரு நடிகனா சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருக்கு தக்லைப் படத்தில் பெரிய ரோல் கொடுத்திருக்கின்றார்கள். அந்தப் படம் சிம்புவின் வேல்யூவை  எடுத்துச் சொல்லும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement