• Jan 18 2025

’கார்த்திகை தீபம்’ தொடரில் இணையும் ‘எதிர்நீச்சல்’ நடிகர்.. வில்லிக்கு ஜோடியா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

‘எதிர்நீச்சல்’ சிரியலில் நடித்த நடிகர், ’கார்த்திகை தீபம்’ தொடரில் முக்கிய கேரக்டரில் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம்’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ‘எதிர்நீச்சல்’ தொடரில் கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் விமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதிரையின் கணவர் கேரக்டரில் நடித்து கலகலப்பாக இந்த சீரியலை மாற்றியவர் கரிகாலன் என்பது தெரிந்தது. இந்த நிலையில் ’கார்த்திகை தீபம்’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் ரம்யாவுக்கு ஜோடியாக விமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரம்யாவின் வில்லத்தனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நையாண்டி கேரக்டரில் விமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



ரம்யா கேரக்டரில் நந்திதா நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக தான் விமல் நடிக்கப் போகிறார் என்றும் அவருடைய கேரக்டர் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் முக்கியத்துவம் பெரும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் ஜீ தமிழ் சேனல் தரப்பில் இருந்து விமல் கேரக்டர் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் தற்போது மீம்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது .

’அம்மா ரம்யா உனக்கு ஏத்த ஆளு இவர்தான், இவர் மட்டும் தான், அதனால் எந்த காரணம் சொல்லாமல் இவரை கல்யாணம் பண்ணிக்கோ’ என்பது போன்ற மீம்ஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’கார்த்திகை தீபம்’ தொடர் மட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ’சொக்கத்தங்கம்’ என்ற சீரியலிலும் நடிகர் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement