• Sep 21 2024

சினிமா துறையிலிருந்து மொத்தமா விலகும் துஷாரா விஜயன்! என்ன காரணம் தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான பரம்பரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் துஷாரா விஜயன். இந்த படத்தில் அவரது ஆக்டிங் மற்றும் வசனங்கள் பலரையும் கவர்ந்து இருந்தது.

இதை தொடர்ந்து கழுவேத்தி மூர்க்கன், அநீதி, வேட்டையன், ராஜன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆறாம் தேதி நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் துஷாரா விஜயுடன் நடிகர் தனுஷ், எஸ்.ஜே சூர்யா, ஏ. ஆர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள். 


இந்த நிலையில், இந்த விழாவில் பேசிய துஷாரா கூறுகையில், எனது 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து மொத்தமாக வெளியேறி விடுவேன். அதன் பிறகு நடிக்க மாட்டேன்.  35 வயதுக்கு பிறகு எனக்கு சுற்றுப்பயணம் செல்ல தான் ஆசை என்று கூறியுள்ளார்.

தற்போது இவருக்கு 26 வது வயது நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 9 ஆண்டுகள் வரை தான் இவர் நடிப்பார் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement